மஹாராஷ்டிரா சனி கோவிலில் 114 முஸ்லிம் ஊழியர்கள் நீக்கம்
மஹாராஷ்டிரா சனி கோவிலில் 114 முஸ்லிம் ஊழியர்கள் நீக்கம்
மஹாராஷ்டிரா சனி கோவிலில் 114 முஸ்லிம் ஊழியர்கள் நீக்கம்
ADDED : ஜூன் 16, 2025 06:36 AM
மும்பை : மஹாராஷ்டிராவின் சனி சிங்னாப்பூர் கோவில் அறக்கட்டளையில் வேலை பார்த்த 114 முஸ்லிம்கள் உட்பட, 167 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள அஹில்யா நகர் மாவட்டத்தின் சிங்னாப்பூர் கிராமத்தில் பிரபலமான சனி பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலை சனி சிங்னாப்பூர் கோவில் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
இந்த கோவிலில் 114 முஸ்லிம்கள் உட்பட ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் ஊழியர்கள் கோவிலில் பணியாற்றுவதை எதிர்த்து சமீபத்தில் ஹிந்து அமைப்புகள் இந்த கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டன. அவ்வாறு நீக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தப்போவதாக கூறியிருந்தன.
இந்நிலையில், கோவிலில் துப்புரவு பணி, தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 114 முஸ்லிம்கள் உட்பட 167 பணியாளர்களை கோவில் அறக்கட்டளை அதிரடியாக பணி நீக்கம் செய்து நேற்று அறிவித்தது.
பணி விதிமுறைகளை மீறியதாகவும், ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என கூறியும் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.