மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகள்: அமித் ஷா ஆய்வு
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகள்: அமித் ஷா ஆய்வு
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகள்: அமித் ஷா ஆய்வு
ADDED : ஜூன் 16, 2025 06:37 AM
புதுடில்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அரசாணை இன்று வெளியாக உள்ள நிலையில், கணக்கெடுப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
'சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 2021ல் நடக்க வேண்டிய சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 2027 மார்ச் 1ஐ அடிப்படை தேதியாக வைத்து, சென்சஸ் பணிகள் துவங்கவுள்ளன.
இதில், ஜாதிவாரி கணகெடுப்பும் நடத்தப்படும். இதற்கான அரசாணை இன்று வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு நடத்தினார். டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி, 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.