உ.பியில் 121 பேர் இறந்த சம்பவம்: முக்கிய குற்றவாளி குறித்து தகவல் தந்தால் சன்மானம்; 6 பேர் கைது
உ.பியில் 121 பேர் இறந்த சம்பவம்: முக்கிய குற்றவாளி குறித்து தகவல் தந்தால் சன்மானம்; 6 பேர் கைது
உ.பியில் 121 பேர் இறந்த சம்பவம்: முக்கிய குற்றவாளி குறித்து தகவல் தந்தால் சன்மானம்; 6 பேர் கைது
ADDED : ஜூலை 04, 2024 04:05 PM

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகர் பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில், ஆன்மிகத் தலைவரான போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முன்தினம்( ஜூலை 02) நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து, ஐஐி மாத்தூர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த 121 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும். கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி
இதற்கிடையே, எப்.ஐ.ஆரில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம் பெறாதது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.