‛ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது': கட்டுமானப் பணி செய்த ராகுல்
‛ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது': கட்டுமானப் பணி செய்த ராகுல்
‛ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது': கட்டுமானப் பணி செய்த ராகுல்
UPDATED : ஜூலை 04, 2024 04:19 PM
ADDED : ஜூலை 04, 2024 04:17 PM

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், டில்லியில் கட்டுமான தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்தது மற்றும் கலந்துரையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு லாரி ஓட்டுநர்களுடன் கலந்துரையாடியபடி லாரியில் பயணம், மார்க்கெட் பகுதிக்கு சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடல், மீனவர்களுடன் சென்று மீன்பிடிப்பது டில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, சூட்கேஸ் சுமந்து சென்றது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

தற்போது, லோக்சபா தேர்தலுக்கு பிறகு ராகுல் எதிர்க்கட்சி தலைவர் ஆகி உள்ளார். லோக்சபா கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், அவர் டில்லியின் ஜிடிபி பகுதிக்கு சென்றார். அங்கு கட்டுமான தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல், அவர்களுடன் இணைந்து கட்டுமான பணியிலும் ஈடுபட்டார்.

இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‛‛ கடினமாக உழைக்கும் இந்த தொழிலாளர்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதுடன், எதிர்காலத்தை உறுதி செய்வது நமது கடமை. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்து உள்ளது.
