சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 20 பேர் சரண்!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 20 பேர் சரண்!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 20 பேர் சரண்!
ADDED : செப் 03, 2025 07:20 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 20 பேர் சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவை நக்சலிசம் இல்லாத நாடாக மாற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 3) சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 20 பேர் சரண் அடைந்தனர். சுக்மா எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது: பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளால் நக்சலைட்டுகள் 20 பேர் இன்று சரண் அடைந்து உள்ளனர்.இன்று சரணடைந்த நக்சலைட்டுகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு மொத்தமாக ரூ.33 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும்.சுக்மா கிராம மக்கள் இந்த நக்சலைட்டுகளின் சித்தாந்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள். நக்சல்கள் அமைப்புகளில் உள்ளவர்கள் இப்போது சரணடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.