முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
ADDED : செப் 03, 2025 06:41 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் எல்.பி.இசட் என அழைக்கப்படும். (லூட்டியன்ஸ் பங்களா ஜோன் ) என்ற இடத்தில் 3.7 ஏக்கரில் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது. இந்த பங்களா ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணி வசம் உள்ளது.
இந்த பங்களாவை ரூ.1400 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்தவற்காக கடந்த 2024 ஆண்டு முதல் பேச்சு நடைபெற்று வந்துள்ளது.இறுதியில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்வதாக இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது . சொத்து மீது யாராவது உரிமை கோர இருந்தால் 7 நாட்களில் உரிய ஆவணங்களுடன் தெரிவிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதை வாங்குபவர் விபரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.