ADDED : செப் 26, 2025 01:42 AM
புதுடில்லி:நாடு முழுதும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசிகளை கண்டறிவதற்கான சிறப்பு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உத்தர பிரதேசத்தின் கான்பூர் தேஹாட் பகுதியில் ஏராளமான வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்திற்கு இடமானவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர். பின் அங்கிருந்த 23 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள், 10 பேர் பெண்கள். தவிர டில்லியில் வசித்து வந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எட்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களை நாடு கடத்துவதற்கான பணிகளை டில்லி போலீசார் துவக்கிஉள்ளனர்.