ADDED : செப் 26, 2025 01:37 AM

இரட்டை வேடம்!
செயற்கை மழை நடவடிக்கைகளை மேற்கொள்ள முந்தைய அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மத்திய அரசை பல முறை அணுகியது. ஆனால் அந்த நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அப்போது, மேக விதைப்பு சாத்தியமில்லை என, பா.ஜ., கேலி செய்தது. அப்போது அது சாத்தியமில்லை, பணத்தை வீணடிப்பதாக கூறினர். இப்போது அது எப்படி சாத்தியமாகும் என்று அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றம் விதித்த பட்டாசு தடையை இப்போது விமர்சிப்பார்களா என்றும் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்? தற்போது அமைச்சராக இருக்கும் கபில் மிஸ்ரா, பட்டாசு வெடிப்பேன் என்று கூறினார். இப்போது அவர் அதை செய்வாரா என்று கேட்க விரும்புகிறேன். பா.ஜ.,வின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை டில்லி மக்கள் பார்க்கின்றனர்.
-சவுரப் பரத்வாஜ், மாநில தலைவர், ஆம் ஆத்மி