"எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும்": ஜெய்சங்கர் உறுதி
"எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும்": ஜெய்சங்கர் உறுதி
"எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும்": ஜெய்சங்கர் உறுதி
ADDED : ஜூன் 11, 2024 10:34 AM

புதுடில்லி: 'எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது: வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான மரியாதையாகும். கடந்த காலத்தில், இந்த அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டது. கோவிட் காலத்தில் சவால்களை திறமையாக எதிர்கொண்டோம்.
எல்லை பிரச்னைகள்
கடந்த ஆட்சி காலத்தில் ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரி போன்ற முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். எல்லை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக நிலவும் எல்லை தாண்டிய பயங்கரவாதப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரிய விஷயம்
ஜனநாயக நாட்டில், ஒரு அரசு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயம். பிரதமர் மோடியின் தலைமையில் வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு உதவி செய்வதால், இந்தியா படிப்படியாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியாவை நம்புகிறது. இதனால் நமது பொறுப்புகள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.