Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Latest Tamil News
புதுடில்லி: ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

போலீஸ் காவலில் இருந்த ரோஹிங்கியா அகதிகள் 5 பேர் மாயமாகிவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து நாடு கடத்த உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது: முதலில் அகதிகள் சட்ட விரோதமாக எல்லை தாண்டி ஊடுருவுகின்றனர். சுரங்கம் தோண்டி அல்லது வேலியை தாண்டி உள்ளே வருகின்றனர். பிறகு நீங்கள், நாங்கள் உள்ளே வந்துவிட்டோம். உங்கள் சட்டம் எங்களுக்கு பொருந்த வேண்டும் என சொல்கிறீர்கள். எனக்கு உணவு, தங்குமிடம் கிடைக்க உரிமை உண்டு. குழந்தைகளுக்கு கல்வி பெற தகுதி உண்டு என நினைக்கின்றீர்கள். உங்களுக்காக சட்டம் வளைய வேண்டும் என விரும்புகிறீர்களா?

இந்தியாவிலும் ஏழை மக்கள் உள்ளனர். அவர்களும் குடிமகன்கள். இந்த சலுகைகள் மற்றும் பலன்கள் அவர்களுக்கு பொருந்தாதா? அவர்களுக்கு பொருந்தாதா?

ஒரு அகதிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் இருந்தால், சட்டவிரோதமாக ஊடுருபவர்களை, அவரை இங்கேயே வைத்திருக்க முடியுமா?

வட மாநிலங்களில் நமக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த எல்லை உள்ளது. ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? எனக்கேள்வி எழுப்பினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us