ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி: இருவர் கவலைக்கிடம்
ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி: இருவர் கவலைக்கிடம்
ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி: இருவர் கவலைக்கிடம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நகைக்கடையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்கள் சஞ்சீவ் பால், ஹிமான்ஷு சிங், ரோஹித் பால் மற்றும் அர்பித் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரசாயனக் கழிவுகளில் எஞ்சியிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளித் துகள்களை மீட்டெடுக்க 10 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்குமாறு தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
நகைக் கடை உரிமையாளர் கூடுதல் பணம் தருவதாக கூறியதால் கழிவுநீர் தொட்டியில், தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.