காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது : பரூக் அப்துல்லா
காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது : பரூக் அப்துல்லா
காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது : பரூக் அப்துல்லா
ADDED : மே 27, 2025 04:53 PM

பஹல்காம்: காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துார் போர் நடவடிக்கை மூலம் தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த போர் பதற்ற சூழ்நிலை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மாநிலத்தில் சுற்றுலா பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஹல்காம் சுற்றுலாப்பகுதிக்கு பரூக் அப்துல்லா இன்று சென்று கோல்ப் விளையாடினார்.
அதன் பிறகு பரூக் அப்துல்லா கூறியதாவது:
காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது. இதன் காரணமாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் பள்ளத்தாக்குக்குச் சென்று அதன் அழகை அனுபவிக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீருக்குச் செல்வதற்கு எதிராக சில நாடுகள் பிறப்பித்த எதிர்மறை பயண ஆலோசனைகளை ரத்து செய்ய, வெளியுறவு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் முயற்சிகள் அவசியம்.
இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.