இந்தியாவில் 85 சதவீத கோடீஸ்வரர்கள் உயர்ஜாதியினர் : ஆய்வில் தகவல்
இந்தியாவில் 85 சதவீத கோடீஸ்வரர்கள் உயர்ஜாதியினர் : ஆய்வில் தகவல்
இந்தியாவில் 85 சதவீத கோடீஸ்வரர்கள் உயர்ஜாதியினர் : ஆய்வில் தகவல்
UPDATED : ஜூன் 26, 2024 08:07 PM
ADDED : ஜூன் 26, 2024 07:54 PM

புதுடில்லி: இந்தியாவில் 85 சதவீத கோடீஸ்வரர்கள் உயர் ஜாதியினராகவும், அதிக செல்வளம் கொண்டவர்களாக உள்ளதாகவும், இதில் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், பிற ஜாதியினர் குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்திய செல்வளம் பகிர்வு மற்றும் வரி நீதி என்ற பெயரில் கடந்த 2014-15 முதல் 2022-2023 வரையிலான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் 85. 67 சதவீத கோடீஸ்வரர்கள் அதிக செல்வ வளம் கொண்டவர்களாக உயர்ஜாதியினரே உள்ளனர். இந்தியாவின் மொத்த செல்வ வளத்தில் 40 சதவீதத்தை உயர்ஜாதியினரே வைத்துள்ளனர். 1 சதவீதத்தினை பிற பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் வைத்துள்ளனர். இதனால் பொருளாதார ஏற்ற தாழ்வு அதிகரித்தும், சமத்துவமின்மையும் நிலவுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.