கருக்கலைப்பு விசாரணை விரைவில் அறிக்கை தாக்கல்
கருக்கலைப்பு விசாரணை விரைவில் அறிக்கை தாக்கல்
கருக்கலைப்பு விசாரணை விரைவில் அறிக்கை தாக்கல்
ADDED : பிப் 12, 2024 06:53 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கருக்கலைப்பு வழக்கு தொடர்பான விசாரணையை, சி.ஐ.டி., போலீசார் முடித்து உள்ளனர். விரைவில் சுகாதார துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை, பெற்றோரிடம் கூறி பணம் வாங்கியதாக, பெங்களூரு பையப்பனஹள்ளி போலீசார், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆறு பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், மாண்டியாவில் ஒரு வீட்டிலும், மைசூரில் தனியார் மருத்துவமனையிலும், சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடந்தது தெரிந்தது.
இதற்காக 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியதும் தெரிந்தது. இதையடுத்து சென்னை டாக்டர் உட்பட மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணையை, சி.ஐ.டி.,யிடம் மாநில அரசு ஒப்படைத்தது. சி.ஐ.டி., அதிகாரிகள் வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து உள்ளனர். விரைவில் சுகாதாரத்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
சட்டவிரோத கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்பட்ட இயந்திரம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.