டில்லியில் கொட்டுது கனமழை; பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் கொடுத்த அலர்ட்
டில்லியில் கொட்டுது கனமழை; பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் கொடுத்த அலர்ட்
டில்லியில் கொட்டுது கனமழை; பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் கொடுத்த அலர்ட்
ADDED : செப் 03, 2025 05:55 PM

புதுடில்லி: டில்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், பயணிகளுக்கு இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
தலைநகர் டில்லியில் பேய் மழை பெய்து வரும் நிலையில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் விதமாக, விமான நிறுவனங்கள் சில அறிவுரைகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிப்பதாவது; டில்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக, விமான நிலையத்துக்கு வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும். எனவே, உங்களின் விமான புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து விமான நிலையத்திற்கு சற்று முன்கூட்டியே புறப்படுமாறு பயணிகளை அறிவுறுத்துகிறோம், என தெரிவித்துள்ளது.
அதேபோல, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ' டில்லியில் கடும் மழை காரணமாக, அனைத்து விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்பாடு குறித்து தகவலை அறிந்து கொண்டு, விமான நிலையம் வருமாறு கேட்டுகொள்கிறோம்,' என தெரிவித்துள்ளது.