Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பீஹார் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரசாந்த் கிஷோர்

பீஹார் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரசாந்த் கிஷோர்

பீஹார் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரசாந்த் கிஷோர்

பீஹார் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரசாந்த் கிஷோர்

UPDATED : ஜூன் 27, 2025 02:00 PMADDED : ஜூன் 27, 2025 01:56 PM


Google News
Latest Tamil News
பாட்னா: பீஹார் மக்கள் பற்றிய சர்ச்சை பேச்சு குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். மேலும், அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தும், கேள்வியும் எழுப்பி வருகிறார். இந்த நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; ராகுல் பீஹாருக்கு வருவதும், போவதுமாக இருக்கிறார். மக்களை சந்திப்பதற்காக எந்த யாத்திரையையும் அவர் மேற்கொள்ளவில்லை. மக்களுடனான தனது தொடர்பை நிரூபிக்க ராகுல் ஒரு இரவாவது பீஹார் கிராமத்தில் தங்கியிருக்க முடியுமா டில்லியில் அமர்ந்து கொண்டு பீஹாரை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறார், என விமர்சித்த பேசினார்.

மேலும், பீஹார் மக்கள் வேலை செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்று கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ராகுலும், ரேவந்த் ரெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது; சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, பீஹாரில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு, இங்குள்ள மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். பீஹாரிகள் உழைப்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்றால், நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள்? தெலங்கானாவில் பிரச்சாரம் செய்து உங்கள் வாக்குகளைப் பெறுங்கள், எனக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us