கோவில் அருகே பசுவின் தலை அசாமில் இனக்கலவர பதற்றம்
கோவில் அருகே பசுவின் தலை அசாமில் இனக்கலவர பதற்றம்
கோவில் அருகே பசுவின் தலை அசாமில் இனக்கலவர பதற்றம்
ADDED : ஜூன் 11, 2025 07:01 AM
குவஹாத்தி : வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு கடந்த 8ல் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், சில இடங்களில் மாட்டிறைச்சி வீசப்பட்டதாகவும் முதல்வர் சர்மா குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக பல்வேறு இடங்களில், 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், துப்ரியில் உள்ள கோவில் அருகே நேற்று முன்தினம் மாட்டிறைச்சி வீசப்பட்டதாக கூறி ஹிந்துக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர்களை ஒரு கும்பல் தாக்கியது.
இதனால் அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்படும் அபாயம் நிலவியது.
இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹிந்து, முஸ்லிம் மோதலை தவிர்க்க கலெக்டர் திபாகர் நாத் தடை உத்தரவை அமல்படுத்தினார்.
கடைகள் மற்றும் சந்தைகளை மூட உத்தரவிட்டார். பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்கப்பட்டது.