பள்ளிக்கூடம் போக பிடிக்கலையாம்; சின்னப்பையன் சேட்டையை பாத்தீங்களா!
பள்ளிக்கூடம் போக பிடிக்கலையாம்; சின்னப்பையன் சேட்டையை பாத்தீங்களா!
பள்ளிக்கூடம் போக பிடிக்கலையாம்; சின்னப்பையன் சேட்டையை பாத்தீங்களா!
ADDED : ஆக 03, 2024 11:52 AM

புதுடில்லி: டில்லியில் தனியார் பள்ளி ஒன்றுக்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில், 14 வயது சிறுவன் தினமும் பள்ளிக்கு செல்வது பிடிக்காமல் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் புரளி என உறுதியானது.
வெடிகுண்டு மிரட்டல்
போலீசார் நடத்திய விசாரணையில், 14 வயது சிறுவன் பள்ளிக்குச் செல்லும் மனநிலையில் இல்லாததால் பல பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்தது. தீவிரமாக விசாரணை நடத்தி வரும் டில்லி போலீசார், 'சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என உறுதியளித்தனர்.