டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு
UPDATED : ஜூலை 25, 2024 06:33 PM
ADDED : ஜூலை 25, 2024 01:38 PM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்தது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் சிறை சென்றார்.
அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது.
சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது; அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று(ஜூலை 25) டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.