Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அமெரிக்க துணை அதிபராக வேன்ஸ் வெற்றி பெற ஆந்திராவில் சிறப்பு பிரார்த்தனை: ஏன் தெரியுமா?

அமெரிக்க துணை அதிபராக வேன்ஸ் வெற்றி பெற ஆந்திராவில் சிறப்பு பிரார்த்தனை: ஏன் தெரியுமா?

அமெரிக்க துணை அதிபராக வேன்ஸ் வெற்றி பெற ஆந்திராவில் சிறப்பு பிரார்த்தனை: ஏன் தெரியுமா?

அமெரிக்க துணை அதிபராக வேன்ஸ் வெற்றி பெற ஆந்திராவில் சிறப்பு பிரார்த்தனை: ஏன் தெரியுமா?

ADDED : ஜூலை 25, 2024 03:00 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வட்லூரு: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட ஜே.டி.வேன்ஸ் வெற்றிப்பெற வேண்டி, ஆந்திராவின் வட்லூரு கிராமத்தில் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. வேன்ஸ் மனைவியான உஷாவின் பூர்வீகமாக இந்த கிராமம் இருப்பதால், அங்குள்ள கோயிலில் பிரார்த்தனை நடக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக 39 வயதான ஜே.டி.வேன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி உஷா சில்குரி வேன்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். உஷா அமெரிக்காவில் பிறந்தாலும், அவரது மூதாதையர் வாழ்ந்த ஆந்திர மாநிலத்தில் உள்ள வட்லூரு என்ற கிராமம் தான் இவரின் பூர்வீகம். உஷாவின் தாத்தா - பாட்டி இந்த கிராமத்தில் கல்வியில் உயர்ந்தவர்களாகவும், ஹிந்து வேதங்களை நன்கு அறிந்தவர்களாகவும் மதிக்கப்பட்டவர்கள்.

உஷாவின் தந்தை சில்குரி ராதாகிருஷ்ணன் சென்னையில் வளர்ந்து அமெரிக்காவில் படித்தவர்; பி.எச்டி முடித்தவர். 2013ல் சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற உஷா, அவருடன் கல்லூரில் ஒன்றாக படித்த வேன்ஸை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது குடியரசு கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வேன்ஸ், வெற்றிப்பெறும் பட்சத்தில் உஷா சில்குரி, அமெரிக்காவின் 2வது பெண்மணி என்றழைக்கப்படுவார். (அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் பெண்மணி என்றும், துணை அதிபரின் மனைவியை 2வது பெண்மணி என்றும் அழைப்பதுண்டு).

தினமும் பூஜை


இதனால் அதிபர் டிரம்ப், துணை அதிபர் வேன்ஸ் வெற்றிப்பெற வேண்டும் என அமெரிக்கா மட்டுமல்லாது, இந்த ஆந்திர கிராமமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. வட்லூரு கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் சுப்பிரமணிய சர்மா என்ற ஹிந்து பூசாரி, துணை அதிபராக வேன்ஸ் வெற்றிப்பெற வேண்டும் என தினமும் பூஜை செய்து வழிபாடு செய்துவருகிறார். வெள்ளி போர்வையால் சாய்பாபா சிலைக்கு போர்த்தி, சிறப்பு வழிபாடு செய்கிறார்.

இந்த கோயில் உஷாவின் முன்னோர்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டது என்றும், வேன்ஸ் வெற்றிப்பெற வேண்டி, தினமும் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்வதாகவும், உஷா இன்னும் உயர்ந்த பதவிகளை பெற வேண்டும் எனவும் பூசாரி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us