விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்யணும்: மத்திய அமைச்சர் சவுகான் திட்டவட்டம்
விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்யணும்: மத்திய அமைச்சர் சவுகான் திட்டவட்டம்
விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்யணும்: மத்திய அமைச்சர் சவுகான் திட்டவட்டம்
ADDED : ஜூன் 22, 2024 02:47 PM

புதுடில்லி: விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தற்போது நமது நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா மிகவும் பழமையான நாடு ஆகும். இதை நாம் அனைவரும் அறிவோம். நான் ஒரு இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மரக்கன்றுகள் நட வேண்டும். மரங்கள் இயற்கையின் உயிர்நாடி, அவை நம் வாழ்வின் பாதுகாவலர்களாகவும் உள்ளன.
இரவும், பகலும்!
மரங்களை நடுவதன் மூலம் பூமியை பசுமையாகவும் செழிப்பாகவும் மாற்ற வழி வகுக்கும். விவசாயத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிரதமரின் தொலைநோக்கு பார்வை தான் எங்களின் நோக்கம். நான் விவசாய அமைச்சரான நாள் முதல், அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று இரவும், பகலும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் சிவராஜ் சவுகான் மரக்கன்று ஒன்றை நட்டார்.