ஒரே வாரத்தில் 2வது பாலம் "டமால்'": பீஹாரில் நடந்த கூத்து
ஒரே வாரத்தில் 2வது பாலம் "டமால்'": பீஹாரில் நடந்த கூத்து
ஒரே வாரத்தில் 2வது பாலம் "டமால்'": பீஹாரில் நடந்த கூத்து
UPDATED : ஜூன் 22, 2024 03:07 PM
ADDED : ஜூன் 22, 2024 02:51 PM

பாட்னா: பீஹாரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆற்றின் குறுக்கே குர்சா கண்டா மற்றும் சிக்தி நகரங்களை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்த நிலையில், இன்று (ஜூன் 22) சிவான் மாவட்டத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் மீது நடப்பதற்கே, அம்மாநில மக்கள் பீதி அடைகின்றனர்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆற்றின் குறுக்கே குர்சா கண்டா மற்றும் சிக்தி நகரங்களை இணைக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாநில அரசு சார்பில், 12 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டது. விரைவில் இந்த பாலம் திறக்கப்பட இருந்த நிலையில், அந்த பாலம் ஸ்திரத்தன்மை இழந்ததால், சில தினங்களுக்கு முன்பு திடீரென இடிந்து தரைமட்டமானது.
2வது பாலம்
இந்நிலையில், இன்று (ஜூன் 22) சிவான் மாவட்டத்தில் படேதா மற்றும் கரவுலி கிராமங்களுக்கு இடையே உள்ள பாலம் இடிந்து விழுந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாயை கடப்பதற்காக, கட்டப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் ஊழல் மலிந்துள்ளதற்கு சாட்சியாக இந்த விபத்து திகழ்கிறது என, எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். பாலத்தின் மீது நடப்பதற்கே, அம்மாநில மக்கள் பீதி அடைகின்றனர்.