Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்; மும்பையில் வரவேற்றார் முதல்வர் பட்னவிஸ்

இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்; மும்பையில் வரவேற்றார் முதல்வர் பட்னவிஸ்

இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்; மும்பையில் வரவேற்றார் முதல்வர் பட்னவிஸ்

இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்; மும்பையில் வரவேற்றார் முதல்வர் பட்னவிஸ்

UPDATED : அக் 08, 2025 01:43 PMADDED : அக் 08, 2025 08:32 AM


Google News
Latest Tamil News
மும்பை: இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இன்று (அக் 08) இந்தியா வந்தடைந்தார். இது இந்தியாவிற்கு அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் ஆகும். மும்பை விமான நிலையத்தில் அவரை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது பிரிட்டன் பிரதமர், பட்னவிஸ் ஆகியோர் சிறிது நேரம் நலம் விசாரித்தனர். பிரதமர் மோடியை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ​​வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

நாளை அக்டோபர் 9ம் தேதி மும்பையில், மோடியும், ஸ்டார்மரும் தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆக வாய்ப்புள்ளது.

இந்த உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவில் கலந்து கொண்டு, பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் ஆகிய இருவரும் முக்கிய உரைகளை நிகழ்த்தி இருப்பதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வரவேற்கிறேன்!

இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன், இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ள, அந்நாட்டு பிரதமர் கேர் ஸ்டார்மரை வரவேற்றேன். இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து நாளைய சந்திப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us