உணவையும், மருந்தையும் கெஜ்ரிவால் வேண்டுமென்றே தவிர்க்கிறார்: கவர்னர் குற்றச்சாட்டு
உணவையும், மருந்தையும் கெஜ்ரிவால் வேண்டுமென்றே தவிர்க்கிறார்: கவர்னர் குற்றச்சாட்டு
உணவையும், மருந்தையும் கெஜ்ரிவால் வேண்டுமென்றே தவிர்க்கிறார்: கவர்னர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 20, 2024 03:12 PM

புதுடில்லி: ‛‛ மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், டாக்டர்கள் பரிந்துரைத்த உணவையும், மருந்தையும் வேண்டுமென்றே தவிர்த்து வருகிறார்'' என டில்லி ஆளுநர் விகே சக்சேனா குற்றம்சாட்டி உள்ளார்.
கெஜ்ரிவால் உடல்நிலை தொடர்பாக திஹார் சிறை கண்காணிப்பாளர் அறிக்கை அடிப்படையில், டில்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு, விகே சக்சேனா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கெஜ்ரிவால் வேண்டுமென்றே பரிந்துரைக்கப்பட்ட உணவு, இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை தவிர்த்து வருகிறார். வீட்டில் இருந்து அனுப்பப்படும் உணவுகளை எடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதும், கலோரி குறைந்த உணவுகளை வேண்டுமென்றே எடுத்து கொள்கிறார்.
கண்காணிப்பாளர் அனுப்பிய அறிக்கையின்படி கெஜ்ரிவாலின் உடல் எடை குறைந்துள்ளது. இதற்கு, கலோரி குறைந்த உணவை எடுத்துக் கொண்டதே முக்கிய காரணம். இவ்வாறு அந்த கடிதத்தில் சக்சேனா கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி பதிலடி
சக்சேனா கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டில்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், கெஜ்ரிவால் உடலில் ரத்த அளவு 50க்கும் கீழ் 8 முறை குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அவர் கோமாவுக்கும், பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என்ன மாதிரியான நகைச்சுவையை கவர்னர் கூறியுள்ளார். ஒருவர் தனது சர்க்கரை அளவை அபாய அளவுக்கு குறைப்பாரா? நோயை பற்றி தெரிந்து கொள்ளாமல் கவர்னர் கடிதம் எழுதக்கூடாது. இது போன்ற சூழ்நிலை உங்களுக்கும் வரலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.