காங்., வேட்பாளரை ஆதரிக்குமாறு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு
காங்., வேட்பாளரை ஆதரிக்குமாறு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு
காங்., வேட்பாளரை ஆதரிக்குமாறு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு
ADDED : பிப் 25, 2024 02:38 AM

யாத்கிர்: ''ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும்படி, எனக்கு அழைப்பு வந்தது,'' என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் கூறி உள்ளார்.
யாத்கிர் குர்மித்கல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், 39. தேவகவுடா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததில் இருந்து, கட்சியில் இருந்து ஒதுங்கி உள்ளார்.
சரணகவுடாவுடன், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பில் இருப்பதாகவும், அவர் காங்கிரஸுக்கு செல்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதை முற்றிலும் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலின்போது, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் ஓட்டுப் போட முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில், சரணகவுடா கந்தகூரின் பெயரும் அடிபடுகிறது.
இதுகுறித்து யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியல் என்றால் எல்லாரும், எல்லாரிடமும் பேசத்தான் செய்வர். தேர்தலின்போது ஆதரவு கேட்பது சகஜம் தான்.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும்படி எனக்கும், காங்கிரசில் இருந்து அழைப்பு வந்தது.
இதில் தவறு இல்லை. எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று, இன்னும் முடிவு எடுக்கவில்லை.
காங்கிரசை ஆதரித்தால், எனது தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்குவதாக, யாரும் என்னிடம் கூறவில்லை. கடந்த ஒன்பது மாதங்களாக எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். தொகுதி நிதி தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை வைத்து உள்ளேன்.
இவ்வாறு அவர்கூறினார்.