Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வானில் பறந்த விமானங்கள் அடுத்தடுத்து கோளாறு; பயணிகள் பீதி

வானில் பறந்த விமானங்கள் அடுத்தடுத்து கோளாறு; பயணிகள் பீதி

வானில் பறந்த விமானங்கள் அடுத்தடுத்து கோளாறு; பயணிகள் பீதி

வானில் பறந்த விமானங்கள் அடுத்தடுத்து கோளாறு; பயணிகள் பீதி

ADDED : ஜூன் 16, 2025 12:12 PM


Google News
Latest Tamil News
லக்னோ: வானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் விமானங்களில் அடுத்தடுத்து இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய 30 வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் விமானத்தில் பயணிக்க பொதுமக்கள் அச்சப்பட்டு வரும் சூழலில், இந்தியா வந்த சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து கோளாறு ஏற்பட்டுள்ள சம்பவம் விமானப் பயணிகளை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து டில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட பைலட், உடனடியாக விமானத்தை மீண்டும் ஹாங்காங்கிற்கே கொண்டு சென்று தரையிறக்கினார். இதனால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அதேபோல, சவூதியில் இருந்து 250 ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம், லக்னோவில் தரையிறங்கும் போது சக்கரத்தில் ஏற்பட்ட உராய்வினால், தீப்பொறி கிளம்பியது. இதையடுத்து, விமானத்தை பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார். உடனடியாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள், விமானத்தில் டயரில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து விமானங்களில் கோளாறு ஏற்படுவதும், விபத்தில் சிக்குவதும், போன்ற நிகழ்வுகள் விமானப் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us