உலகின் மிகப்பெரிய நடவடிக்கை: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் பேச்சு
உலகின் மிகப்பெரிய நடவடிக்கை: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் பேச்சு
உலகின் மிகப்பெரிய நடவடிக்கை: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் பேச்சு

புதுடில்லி: '' இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளில் ஒன்று. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள், போலீசார் மற்றும் ஊடகங்களின் கண்காணிப்பின் கீழ் தேர்தல் நடத்தப்படுகிறது,'' என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறினார்.
சுவிடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த தேர்தல் தொடர்பான மாநாட்டில் ஞானேஷ்குமார் பேசியதாவது: 1960 முதல் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு, தேர்தலுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டு வருகிறது. இதில் ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் இருக்கும். உலகின் மிகவும் கடுமையான மற்றும் வெளிப்படையான பயிற்சிகளில் ஒன்றாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு இருக்கிறது. இது தேர்தல் செயல்முறையில் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது.
தேர்தலின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், போலீசார், தேர்தல் செலவின கண்காணிப்பாளர்கள் மற்றும் மீடியாக்கள் பல்வேறு கட்டங்களில் தணிக்கையாளர்களாக செயல்படுகின்றனர். தேர்தலின் போது ஓட்டுச்சாவடி ஊழியர்கள், போலீசார், பார்வையாளர்கள், கட்சிகளின் ஏஜென்ட்டுகள் உட்பட 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கொண்ட தேர்தல் கமிஷன், உலகின் மிகப்பெரிய அமைப்பாக மாறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.