டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 134 பேர் சிக்கினர்
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 134 பேர் சிக்கினர்
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 134 பேர் சிக்கினர்

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 134 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை நாடு கடத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
டில்லியில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக டில்லியின் பல இடங்களில் சோதனை நடத்தி வங்கதேசத்தவர்களை கைது செய்துள்ளனர். அவர்களை நாடு கடத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், இன்றும் டில்லியின் தெற்கு பகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகள் மற்றும் சந்தேகப்படும் பகுதிகள் என 14 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், சந்தேகத்துக்கு உள்ளான நபர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்று்ம் ஆதார் அட்டைகளை வாங்கி சோதனை செய்தனர். அப்போது, சட்டவிரோதமாக தங்கியிருந்த 138 வங்கதேசத்தவர்கள் பிடிபட்டனர். அவர்களில் 38 பேர் பெண்கள் மற்றும் 43 பேர் குழந்தைகள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்கள், நாடு கடத்தும் பணியில் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.