நீட் 2025 தேர்வுக்குத் தயாராகுங்கள்!
நீட் 2025 தேர்வுக்குத் தயாராகுங்கள்!
நீட் 2025 தேர்வுக்குத் தயாராகுங்கள்!
UPDATED : ஜூலை 26, 2024 05:50 PM
ADDED : ஜூலை 26, 2024 05:31 PM

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வு - 'நீட்' எனும் 'தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு'!
நீட் 2025க்கான அதிகாரப்பூர்வ தேதி தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்படும். கடந்தகால போக்குகளின் அடிப்படையில், மே 2025 முதல் வாரத்தில் 'நீட்' நடைபெற வாய்ப்புள்ளதாக sarvgyan.com தெரிவித்துள்ளது.
விண்ணப்ப செயல்முறை டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025-ல் ஆன்லைனில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். பதிவு செய்வதற்கான காலக்கெடு பிப்ரவரி 2025 ஆக இருக்கலாம். இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தேதிகளுக்கும், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த தகவல்களுக்கும் www.nta.ac.in எனும் அதிகாரப்பூர்வ என்.டி.ஏ., இணையதளத்தை பார்க்கவும்.
தற்போது 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும், முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதி, அந்த மதிப்பெண்ணை மேம்படுத்த விரும்புபவர்களும் 'நீட் 2025'க்கு தயாராவதற்கான நேரம் இது. சமீபத்திய பாடத்திட்டத்தைக் கற்றுக் கொள்ளவும், மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறியவும், அதற்கேற்ப திட்டமிடவும் இது சரியான நேரம்.
தேர்விற்கு தயாராக சில ஆலோசனைகள்:
* சமீபத்திய 'நீட்' பாடத்திட்டத்துடன் பொருந்தக்கூடிய புத்தகங்கள் மற்றும் நம்பகமான 'ஆன்லைன்'களை நாடலாம். என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்களை தவறாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் நேரத்தை ஒதுக்கும் ஒரு யதார்த்தமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அட்டவணையை உருவாக்கவும்.
* மாதிரி தேர்வுகளை எழுதுவதன் வாயிலாக, தேர்வு முறை, அதிக மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகளை கண்டறிதல் மற்றும் பயனுள்ள நேர மேலாண்மை ஆகியவை குறித்த அனுபவத்தை பெறலாம்.
* தேர்வுக்கு தயாராகும்போது ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தால், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் அல்லது நம்பகமான 'ஆன்லைன்'களின் உதவியைப் பெற பயப்பட வேண்டாம்.
இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றி, முன்கூட்டியே தேர்வுக்கு தயாராவதன் வாயிலாக, 'நீட் 2025' தேர்வில் வெற்றிக்கான வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தலாம். இந்த தேர்வில் வெற்றிபெற அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் உத்தி சார்ந்த அணுகுமுறை அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.