நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு

புதுடில்லி: கடினமான நேரத்தில் நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்பு படையினர் தெரிவித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறி இருப்பதாவது: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் சேதம் வருத்தமளிக்கிறது.
இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுடனும், அரசாங்கத்துடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.
நட்பு அடிப்படையில் அண்டை நாடான நேபாளத்திற்கு தேவைப்படும் எந்த ஒரு உதவியும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


