ஜூன் 18ம் தேதி கூடுகிறது பார்லிமென்ட்?
ஜூன் 18ம் தேதி கூடுகிறது பார்லிமென்ட்?
ஜூன் 18ம் தேதி கூடுகிறது பார்லிமென்ட்?
ADDED : ஜூன் 10, 2024 11:41 AM

புதுடில்லி: வரும் ஜூன் 18ம் தேதி பார்லிமென்ட் முதல் கூட்டம் கூட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களில் 33 பேர் மத்திய அமைச்சரவைக்கு புதுமுகங்கள். இந்நிலையில், வரும் ஜூன் 18ம் தேதி பார்லிமென்ட் முதல் கூட்டம் கூட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். ஜூன் 20ம் தேதி சபாநாயகர் தேர்வு செய்யப்படுவர். ஜூன் 21ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது.
முதல் பார்லிமென்ட் கூட்டம் எப்போது கூடுகிறது என்பது குறித்து, இன்று மாலையில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.