ரூ.12 கோடி சந்தன கட்டை மஹாராஷ்டிராவில் பறிமுதல்
ரூ.12 கோடி சந்தன கட்டை மஹாராஷ்டிராவில் பறிமுதல்
ரூ.12 கோடி சந்தன கட்டை மஹாராஷ்டிராவில் பறிமுதல்
ADDED : செப் 22, 2025 12:46 AM
பால்கர்,: மஹாராஷ்டிராவில், வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மஹாரா ஷ்டிராவின், பால்கர் தாலுகாவின் தஹிசர் வனப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 200 சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வனத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பண்ணை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளின் மதிப்பு, 12 கோடி ருபாய். இந்த பண்ணை வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை. சேதமடைந்திருந்ததால், அந்த பண்ணை வீடு கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. முதற்கட்ட விசாரணையில், இந்த சந்தன கட்டைகள் தென் மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு, இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், இங்கிருந்து வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
சந்தன மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. இந்த சோதனையின்போது 'புஷ்பா' என்ற சந்தேக வார்த்தை குறித்து தெரியவந்தது. இது கடத்தலில் தொடர்புடைய உள்ளூர்வாசியா, சந்தன கடத்தலுக்கு கடத்தல் கும்பல் வைத்த ரகசிய பெயரா என விசாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.