Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு

சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு

சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு

சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு

UPDATED : அக் 23, 2025 12:38 PMADDED : அக் 23, 2025 12:31 PM


Google News
Latest Tamil News
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பீஹார் மாநில சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 14ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. தனித்தனியாக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அண்மையில் சுமுகமாக முடிவடைந்தது.

எதிர்க்கட்சிகளின், இண்டி கூட்டணியில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பயங்கர மோதல் வெடித்தாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அந்த குழப்பம் நீங்கியது. இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்வர் வேட்பாளராக வி.ஐ.பி., கட்சியின் சஹானி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆளும் தேஜ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகிறது. பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்தது.

யார் இந்த தேஜஸ்வி?

லாலுவின் இளைய மகனான தேஜஸ்வி, 35, ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். நிதிஷ் குமாருடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, துணை முதல்வராகவும் பதவி வகித்தார். டில்லி டேர்டெவில்ஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர் தேஜஸ்வி.
இவர், 2015ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். 2020ல் 2வது முறையாக எம்எல்ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டார். லாலு மீதான ஊழல் வழக்குகளில் தேஜஸ்வியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us