காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: என்.ஐ.ஏ., விசாரணை தீவிரம்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: என்.ஐ.ஏ., விசாரணை தீவிரம்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: என்.ஐ.ஏ., விசாரணை தீவிரம்
ADDED : ஜூன் 10, 2024 11:15 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்துள்ளனர். போலீசாருக்கு உதவ என்.ஐ.ஏ., குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில், ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ்கோரி குகைக் கோவிலுக்கு, 30க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏற்றி பஸ் ஒன்று சென்றது. போனி பகுதியில் உள்ள டெரியாத் கிராமம் அருகே பஸ் வந்த போது, பயங்கரவாதிகள் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் விரைந்துள்ளனர். போலீசாருக்கு உதவ என்.ஐ.ஏ., குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து, விவரங்களை சேகரிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.