ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து சார்தாம் யாத்ரீகர்கள் மூவர் பலி
ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து சார்தாம் யாத்ரீகர்கள் மூவர் பலி
ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து சார்தாம் யாத்ரீகர்கள் மூவர் பலி
ADDED : ஜூன் 27, 2025 01:56 PM
ருத்ரபிரயாக்: பத்ரிநாத் கோவிலுக்கு யாத்ரீகர்கள் சென்ற பஸ், உத்தராகண்டின் அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்ததில் மூன்று பேர் பலியாகினர்.
ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவை சேர்ந்த 31 யாத்ரீகர்கள் உத்தராகண்டின் பத்ரிநாத்துக்கு சார்தாம் யாத்திரையாக பஸ்சில் சென்றனர்.
உத்தராகண்டின் ருத்ரபிரயாக் - கவுசார் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த லாரி உரசியதில் கோல்டிர் கிராம பகுதியில் பாயும் அலக்நந்தா ஆற்றில் பஸ் கவிழ்ந்தது. போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் மாவட்ட பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் மீட்புப்பணியில் தடை ஏற்பட்டது.
இந்நிலையில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மத்திய பிரதேசத்தின் ராஜ்காரை சேர்ந்த கவுரி சோனி, 41, மற்றும் விஷால் சோனி, 42, குஜராத்தின் சூரத்தை சேர்ந்த ட்ரிம்மி, 17, என அடையாளம் காணப்பட்டுள்ளது.