உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர்
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர்
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர்
ADDED : ஜூன் 04, 2025 03:33 PM

புதுடில்லி: உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி பாலத்தை, ஜூன் 6ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலமாகும்.
1,315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும் இது நில அதிர்வு மற்றும் காற்று சக்திகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் இணைப்பை மேம்படுத்தும்.
பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு ஜூன் 6ம் தேதி செல்கிறார். தொடர்ந்து கட்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் முதல் கேபிள்-ஸ்டாய்டு ரயில் பாலமான அஞ்சி பாலம் ஆகியவை அடங்கும்.
அதை தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் வந்தே பாரத் ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்.