ADDED : ஜூலை 30, 2010 03:54 AM
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அமராவதி பழைய ஆயக்கட்டுப் பகுதியில் குறுவை நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.அமராவதி பாசனத்தால் பழைய ஆயக்கட்டுப் பகுதியில் 6,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன.
இதில், தற்போது 3,500 ஏக்கர் நிலப் பரப்பில் கரும்பு, வாழை இதர பயிர்கள் பயிரிடப் பட்டுள்ளன. மீதமுள்ள 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.இதற்கு தேவையான விதை நெல், மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. ஏ.டி.டி., 43 விதை நெல் அரசு மானி யத்தில் கிடைக்கிறது. இம்மையங்களில் இருந்து 30 டன் விதை நெல் மானிய விலையில் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் களைக்கொல்லி மருந்துகள் வழங்கப்படுகின்றன.