தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு, மெட்ரிக் துணைத் தேர்வு ஹால்டிக்கெட் வினியோகம்

பத்தாம் வகுப்பு, மெட்ரிக் துணைத் தேர்வு ஹால்டிக்கெட் வினியோகம்

பத்தாம் வகுப்பு, மெட்ரிக் துணைத் தேர்வு ஹால்டிக்கெட் வினியோகம்


UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM

ADDED : ஜூன் 23, 2011 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM ADDED : ஜூன் 23, 2011 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மார்ச்சில் பள்ளியில் படித்து தேர்வு எழுதியவர்கள், அவர்கள் படித்த பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம்.


தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் பின்வரும் மையங்களில் பெற வேண்டும் :
செங்கல்பட்டு: (பெருங்களத்தூர் முதல் ஆலந்தூர் வரை உள்ள தனித்தேர்வர்கள்) ஜெயகோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்.
செங்கல்பட்டு: (வண்டலூர் முதல் கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் வரை உள்ள தனித் தேர்வர்கள்) அறிஞர் அண்ணா முனிசிபல் உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.
காஞ்சிபுரம்: சி.எம்.சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
பொன்னேரி: டிவி.எஸ்.ரெட்டி மேல்நிலைப் பள்ளி, மீஞ்சூர்.
திருவள்ளூர்: ஞானவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
தென்சென்னை: மதரஸா ஐ ஆசாம் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
மத்திய சென்னை: சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
கிழக்கு சென்னை: இந்து மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி.
வடசென்னை: பெண்டிக் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி.
பரமக்குடி கே.ஜெ.இ.எம். பள்ளி, ராமநாதபுரம் ராஜாஸ் பள்ளி, தேவகோட்டை பிரிட்டோ பள்ளி, சிவகங்கை மன்னர் பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சி.எம்.எஸ்., பள்ளி, விருதுநகர் எச்.பி.எஸ்.எம்., பள்ளி, உத்தமபாளையம் முகமது பாத்திமா பள்ளி, பெரியகுளம் கல்வி மாவட்டத்திற்கு தேனி நாடார் சரஸ்வதி பள்ளி, உசிலம் பட்டி கல்வி மாவட்டத்தில் திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி, மேலூர் பகுதியினருக்கு மேலூர் அரசு ஆண்கள் பள்ளி, மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு ஓ.சி.பி.எம்., பள்ளி, மதுரை கல்வி மாவட்டத்தினருக்கு தியாகராஜா மாதிரி பள்ளி, பழனி கல்வி மாவட்டத்தில் ஆயக்குடி ஐ.டி.ஓ., பள்ளி, திண்டுக்கல் அங்குவிலாஸ் பள்ளியில் வினியோகிக்கப்படும்.


தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் வீட்டு முகவரிக்கு அஞ்சலில் அனுப்பப்பட மாட்டாது.


தேர்வு முடிவு வெளியானவுடன், மதிப்பெண் சான்றிதழைப் பெறுவதற்கு தேர்வர்கள் வீட்டு முகவரி எழுதி ரூ.30க்கு அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறை ஒன்றினைத் தேர்வு எழுதும் முதல் நாளில் தேர்வுக்கூட தலைமைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
ஹால்டிக்கெட்டில் தவறு இருந்தால், அதனை சரிசெய்ய மதிப்பெண் சான்றிதழ் நகலுடன், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பிக்கலாம். ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள், உரிய காலத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்ததற்கான ஆதாரத்துடன் மதுரையில் உள்ள அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனரை சந்திக்க வேண்டும்.


மெட்ரிக் மையங்கள்: மெட்ரிக் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 29 முதல் ஜூலை 9 வரை நடக்க உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகள் ஜூன் 27, 28ம் தேதிகளில் வினியோகிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us