UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 01:23 PM
சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org -ல் கலந்தாய்வு அட்டவணையை மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம் .
சென்னையில் நடைபெறும் முதல் கட்ட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கலந்தாய்வில் பங்கேற்க 1,600 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்களைக் கொண்ட தேனி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் நம்பிக்கையு டன் உள்ளனர்.
எனினும் முதல் கட்டமாக 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களில் கலந்தாய்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 1,600 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜுலை 6ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
