தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM

ADDED : ஜூன் 26, 2011 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM ADDED : ஜூன் 26, 2011 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் ஜூன் 25ல் வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் முதல் இடத்தைப் பிடித்தார்.


ஆர்

.டி.. - டி.எஸ்.பி. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் டி.என்.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இத்தேர்வை, ஒரு லட்சம் பேர் எழுதினர். இதில் தகுதிபெற்ற 1,300 பேர், கடந்த ஜனவரி 22,23 ஆகிய தேதிகளில் நடந்த மெயின் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் இருந்து, 129 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.


கடந்த

23, 24 ஆகிய தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன், முதல் இடத்தைப் பிடித்தார். கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவர், மெயின் தேர்வில் 600க்கு 394.5 மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வில் 80க்கு 60 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us