தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தனி இயக்குனரகம் அமையுமா?

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தனி இயக்குனரகம் அமையுமா?

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தனி இயக்குனரகம் அமையுமா?


UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM

ADDED : ஜூன் 26, 2011 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM ADDED : ஜூன் 26, 2011 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை

: பாலிடெக்னிக் கல்லூரிகளை தனி இயக்குனரகத்தின் கீழ் நிர்வகித்தால்தான், தொழில்நுட்ப கல்வித் தரம் உயரும் என்ற கருத்து உருவாகியுள்ளது.


தமிழகத்தில்

1960களில் தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குனரம்(டி..டி..,) துவக்கப்பட்டது. அப்போது அண்ணா பல்கலை கிடையாது. 5 அரசு, 3 உதவிபெறுபவை என 8 பொறியியற் கல்லூரிகளும், 18 அரசு, 22 உதவிபெறுபவை என 40 பாலிடெக்னிக்குகளும் செயல்பட்டு வந்தன. தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குனரகமே இவற்றின் நிர்வாகம், பாடத்திட்டம், தேர்வு, சான்றிதழ் வழங்குவது என அனைத்தையும் கவனித்தது.


அண்ணா

பல்கலை துவக்கப்பட்ட பின்பு, பொறியியற் கல்லூரிகளின் பாடத்திட்டம், தேர்வு, சான்றிதழ் வழங்குதல் போன்ற 90 சதவீத பணிகள் அங்கு சென்றன. தற்போது சேலம், நெல்லை, பர்கூர், காரைக்குடி உட்பட 6 அரசு பொறியியற் கல்லூரிகள் மட்டுமே இந்த இயக்குனரகத்தின் கீழ் வருகின்றன. மீதியுள்ள அனைத்தும் பாலிடெக்னிக்குகளே. இதனால், பொறியியற் கல்லூரி தொடர்பாக 10 சதவீத பணிகளும், பாலிடெக்னிக் தொடர்பாக 90 சதவீத பணிகளும் இந்த இயக்குனரகத்தில் நடக்கிறது. இயக்குனர், இணைஇயக்குனர், துணை இயக்குனர் என அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் பொறியியற் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களே உள்ளனர். அவர்களின் நடவடிக்கை அனைத்தும் பாலிடெக்னிக்குகளை புறக்கணிப்பதாகவே உள்ளது.


உதாரணமாக

கடந்த ஆட்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பொறியியற் கல்லூரி, பாலிடெக்னிக்குகளுக்கு தலா 100 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், பொறியியற் கல்லூரி ஆசிரியர்கள் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பாலிடெக்னிக்குகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இதுவரை நிரந்தரமாகவில்லை. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் நிலை மிக மோசமாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கட்டடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் என உள்ளது.


ஆனால்

புதிய பாடப்பிரிவுகள், மாணவர்கள் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கேற்ப ஆசிரியர்கள், கட்டடம், ஆய்வுக் கூட வசதிகள் பெருகவில்லை. மேலும் மாணவர்கள் வருகை அதிகரிப்பால் ரெகுலர், ஷிப்டு முறை, பகுதிநேர படிப்பு என ஒரே நாளில், ஒரே ஆசிரியரே மூன்றுவித முறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப கல்வியின் தரம் பாதித்துவிட்டது. இதை இயக்குனரக அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.


இதனால்

பாலிடெக்னிக்குகளை கவனிக்க தனி இயக்குனரகம் தேவை என்ற கருத்து மேலோங்கிவிட்டது. புதிய ஆட்சியில் போதிய ஆர்வம் காட்டினால், தொழில்நுட்ப கல்வி வளர்ச்சி பெறும். இதற்காக தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் கோபால், பொதுச் செயலாளர் வி.சுப்பாராஜ் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். விரைவில் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us