UPDATED : ஜூன் 27, 2011 12:00 AM
ADDED : ஜூன் 27, 2011 11:08 AM
மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். இந்திய மருத்துவ முறை அரசு கல்லூரிகளில் ஜுலை முதல் வாரத்துக்குள் விண்ணப்ப விநியோகம் தொடங்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. அரசு கல்லூரிகளில் 296 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1030 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. அரசு கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.5,000. சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் படிப்புக்கு ஏற்ப ரூ.25,000 முதல் 33,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
