தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் கூடுதல் இடங்களை நிறுத்தி வைக்க உத்தரவு

கல்லூரிகளில் கூடுதல் இடங்களை நிறுத்தி வைக்க உத்தரவு

கல்லூரிகளில் கூடுதல் இடங்களை நிறுத்தி வைக்க உத்தரவு


UPDATED : ஜூன் 27, 2011 12:00 AM

ADDED : ஜூன் 27, 2011 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2011 12:00 AM ADDED : ஜூன் 27, 2011 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது, கல்லூரி நிர்வாகங்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இப்பல்கலையில், 72 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டும் இக்கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையை விட கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி நிர்வாகங்கள், பல்கலைக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
இதனடிப்படையில், கலை பிரிவு பாட வகுப்புகளில் 15 சதவீதமும்( 9 சீட்), அறிவியல் பிரிவு பாடவகுப்புகளில் 10 சதவீதமும் (4 சீட்) கூடுதலாக மாணவர்களை சேர்த்துக்கொள்ள சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கு, பல்கலை அனுமதி வழங்கும். இதற்கு பல்கலை கல்வி பேரவையும் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கம் போல இந்தாண்டும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்தன.


துணைவேந்தர் கற்பககுமாரவேலின் பதவிக்காலம் முடிவடைந்த மே 19க்கு பின், பல்கலையை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலர் உட்பட 5 பேர் அடங்கிய கன்வீனர் குழு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின், உயர்கல்வித்துறை செயலராக கண்ணன் நியமிக்கப்பட்டார். பல்கலையின் அலுவல்கள் குறித்து பல்கலை அதிகாரிகள் உயர் கல்வித்துறை செயலர் கண்ணனிடம் கேட்ட போது, சட்டசபை நடப்பதால் வழக்கமான பணிகளை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள் என கன்வீனர் குழு உறுப்பினர்களிடம் கூறிவிட்டார்.


கல்லூரிகளில் கூடுதல் இடங்களை அனுமதியும் வழக்கமான பணிகளில் ஒன்று தானே என கன்வீனர் குழு உறுப்பினர்கள் 4 பேரும், கூடுதல் இடங்களுக்காக ஜூன் 1ல் அனுமதியை வழங்கினர். அதனடிப்படையில், முதற்கட்டமாக 19 கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பல்கலை அதிகாரிகள் அனுப்பி விட்டனர்.


ஆனால், பல்கலையில் உள்ள சிலர், உயர்கல்வித்துறை செயலரிடம், உங்கள் அனுமதி இன்றி கல்லூரிகளில் கூடுதல் இடங்களை வழங்கி விட்டனர் எனக்கூற, உயர்கல்வித்துறை செயலரும் அதற்கான கோப்பை பல்கலை அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுள்ளார். அந்த கோப்பில் உயர் கல்வித்துறை செயலர், கூடுதல் சீட்டுகளுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது என, ஜூன் 16ல் உத்தரவிட்டார். கூடுதல் இடங்களுக்கு அனுமதித்து கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை எப்படி வாபஸ் பெறுவது? இது சட்ட சிக்கலாகி விடுமே என பல்கலை அதிகாரிகள் தவித்தனர்.


இந்நிலையில், நேற்று முன்தினம் உயர் கல்வித்துறை செயலர் கண்ணன், மதுரை காமராஜ் பல்கலைக்கு வந்தார். கன்வீனர் குழு கூட்டத்தில் அவர், கல்லூரிகளில் கூடுதல் இடங்களை  நிறுத்தி வைக்க நான் இட்ட உத்தரவு என்ன ஆனது என, கேட்டார். "ஏற்கனவே அனுமதி உத்தரவு அனுப்பப்பட்டது&' என, கன்வீனர் குழு உறுப்பினர்கள் கூறவே, "அந்த உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என, கடிதம் அனுப்புங்கள்,&' என கூறிவிட்டார். இதை கேட்ட கன்வீனர் குழு உறுப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவரை, உறுப்பினர்கள் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
பல்கலை அதிகாரிகள் சிலர் இது குறித்து கூறுகையில், துணைவேந்தர் பதவியில் இல்லாதபோது பல்கலையை நிர்வகிக்க பல்கலை சட்டப்படி கன்வீனர் குழு அமைக்கப்படும். இக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடாது, என்ற முன்னெச்சரிக்கையில் தான், வழக்கத்திற்கு மாறாக உயர் கல்வித்துறை செயலர், கன்வீனராக நியமிக்கப்பட்டார்.


ஆட்சி மாற்றத்தால், உயர்கல்வித்துறை செயலர் கணேசனுக்கு பதில் கண்ணன், கன்வீனர் குழுவில் இடம் பெற்றார். இக்குழு உறுப்பினர்களிடம், தான் பிசியாக இருப்பதாகவும், வழக்கமான விஷயங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள் என, உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் கூறியதன் பேரிலேயே கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கினர்.


தற்போது செயலர் மட்டுமே அனுமதி மறுத்துள்ளார். பிற நான்கு உறுப்பினர்களும் அனுமதித்துள்ளனர். பல்கலை சட்டப்படி கன்வீனர் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அதிகாரமே உள்ளது. மெஜாரிட்டி உறுப்பினர்கள் அனுமதித்ததன் அடிப்படையில், கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி செல்லும்.


பல்கலையின் இறையாண்மையில் உயர்கல்வித்துறை செயலர், யாரோ சிலர் தவறாக வழிகாட்டியதன் காரணமாக கல்லூரிகளில் கூடுதல் சீட்களை அனுமதிக்க மறுப்பது கல்லூரிகளை மட்டுமின்றி, மாணவர்களையும் பாதிக்கச் செய்யும். தமிழக கல்வித்துறை முன்னேற வேண்டும் என்ற அக்கறையின் காரணமாக பள்ளிக் கல்வித்துறையில், சமச்சீர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்கிறார்.


இந்நிலையில், உயர் கல்வித்துறையில் நெல்லை பல்கலை துணைவேந்தர் தேர்வுக்குழுவில் மாற்றம், மதுரை பல்கலையின் கல்லூரிகளில் கூடுதல் சீட் அனுமதி மறுப்பு போன்றவை உயர் கல்வித்துறையில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையும்.


இப்பல்கலைக்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளில் புதிய பாடங்கள் துவக்க கடந்த ஆகஸ்ட் மாத்திலேயே விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அனுமதியை பல்கலை தராததால், புதிய பாட வகுப்புகளை துவக்க முடியாமல் கல்லூரிகள் தவிக்கும் நிலை உள்ளது. இதற்கான அனுமதியும் உடனடியாக தரப்பட வேண்டும். இப்பல்கலை நிர்வாகம் சீராக நடைபெற புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பல்கலையில் உள்ள லோக்கல் பாலிக்டிக்சிற்கு இடமளிக்காமல் உயர்கல்வி வளர்ச்சி ஏற்படும் வகையிலும், மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும். இப்பல்கலையில் ஏற்பட்டுள்ள தேவையற்ற நிர்வாக குளறுபடிகளை போக்க, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us