தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேனி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்

தேனி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்

தேனி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்


UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM

ADDED : ஜூன் 28, 2011 12:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM ADDED : ஜூன் 28, 2011 12:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2006ம் ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஜுன் 27ம் தேதி அங்கீகாரம் அளித்துவிட்டது. எனவே இந்தக் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களைச் சேர்க்கலாம்.


அதேப்போல, கடந்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில், நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த கல்லூரிக்கு தொடர்ந்து 2014-15ம் கல்வி ஆண்டு வரை தமிழக அரசு ஒப்புதல் பெற வேண்டியிருக்கும். அதன் பிறகு இந்தக் கல்லூரி அங்கீகரிக்கப்படும்.


இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி நிலவுவதும், ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில், திருவாரூ, தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


ஜுன் 30ம் தேதி மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கவுன்சிலிங் துவங்குகிறது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us