UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 02:36 PM
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பெற இன்று கடைசி நாள்.
இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்ரல் 2011 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற தேர்வர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கான தேர்வுகூட அனுமதிச் சீட்டு பெற ஜூன் 28ம் தேதி கடைசி நாள்.
பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்களாகத் தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள்
தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு முடிவு வெளியானவுடன் மதிப்பெண் சான்றிதழைப் பெறுவதற்கு, சுய விலாசமிட்டு, ரூ. 30 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையை தேர்வு எழுதும் முதல் நாளில் தேர்வுக்கூட தலைமைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்
