UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM
ADDED : ஜூலை 12, 2011 11:49 AM
இந்திய ராணுவத்தின் தரைப்படையில் எண்ணற்ற காலியிடங்கள் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாவதைப் படிக்கிறோம். சுமார் 2300 அதிகாரி நிலை பணியிடங்கள் காலியாக இருப்பதால் தரைப் படையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கடந்த மாதம் கூட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் டெகராடூன் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள மிலிடரி அகாடமிக்களில் பயிற்சி பெறுவோர் இந்த காலியிடங்களில் பணி அமர்த்தப்படும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் முதன்முதலாக இந்த காலியிடங்கள் அனைத்தும் மிலிடரி அகாடமி பயிற்சியாளர்களால் நிரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில் தரைப்படையின் அனைத்து காலியிடங்களும் தவறாது நிரப்பப்பட்டு விடும் என்று தரைப்படை நம்புகிறது. மேலும் ஜூலை 18 அன்று பீகாரிலுள்ள கயா என்னுமிடத்திலும் புதிதாக ஒரு மிலிடரி அகாடமியை தரைப்படை நிறுவவுள்ளது.
