தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு இன்ஜி., கல்லூரியில் ஓசி, பிசிஎம், பிசி இடங்கள் நிறைவு

அரசு இன்ஜி., கல்லூரியில் ஓசி, பிசிஎம், பிசி இடங்கள் நிறைவு

அரசு இன்ஜி., கல்லூரியில் ஓசி, பிசிஎம், பிசி இடங்கள் நிறைவு


UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM

ADDED : ஜூலை 19, 2011 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM ADDED : ஜூலை 19, 2011 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜுலை 8ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


இதில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.


இதில் ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு பிரிவினருக்கும் என தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் ஓ.சி., பி.சி.எம்., பி.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவ சேர்க்கை முடிந்துவிட்டது.


தற்போது அரசு கல்லூரிகளில் எம்.பி.சி., எஸ்.சி.ஏ., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடங்களே உள்ளன. அதிலும் எம்.பி.சி. பிரிவினருக்கு 6 இடங்கள் மட்டுமே உள்ளன.


பொதுவாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 3372 இடங்களும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 330 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரியில் 1,12,954 இடங்களும் காலியாக உள்ளன. மொத்தமாக 1,16,656 இடங்கள் 11 நாள் கலந்தாய்விற்குப் பிறகு காலியாக உள்ளன. இவ்விடங்களில் மாணவர்களை சேர்க்க தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us