UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM
ADDED : ஜூலை 20, 2011 01:02 PM
ஜுலை 19ம் தேதி பொறியியல் கலந்தாய்விற்கு 3060 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 635 மாணவர்கள் வரவில்லை. வந்தவர்களில் 9 மாணவர்கள் சேர்க்கை பெறாமல் திரும்பிச் சென்றுவிட்டனர். மீதமுள்ள 2416 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று அதற்கான ஆணையையும் பெற்றுக் கொண்டனர்.
ஜுலை 8ம் தேதி துவங்கி 12 நாட்கள் நடைபெற்றுள்ள பொதுப் பிரிவு கலந்தாய்வில் இதுவரை 29,004 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 20,169 மாணவர்கள் சுயநிதி பொறியியல் கல்லூரியிலும், 4303 மாணவர்கள் அரசு கல்லூரிகளிலும், 4532 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் சேர்ந்துள்ளனர்.
ஜுலை 19ம் தேதி நிலவரப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் 3053 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 251 இடங்களும், சுயநிதி பொறியியல்கல்லூரிகளில் 1,11,257 இடங்களும் காலியாக உள்ளன. ஆகமொத்தம் தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 1,14,561 பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
