தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துவக்கக் கல்வியைப் பொறுத்ததுதான் இந்தியாவின் எதிர்காலம்-கலாம்

துவக்கக் கல்வியைப் பொறுத்ததுதான் இந்தியாவின் எதிர்காலம்-கலாம்

துவக்கக் கல்வியைப் பொறுத்ததுதான் இந்தியாவின் எதிர்காலம்-கலாம்


UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM

ADDED : ஜூலை 23, 2011 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM ADDED : ஜூலை 23, 2011 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உதைப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றி அப்துல் கலாம், கல்வியின் முக்கியத்தும் பற்றி குறிப்பிட்டார். இந்தியாவில் துவக்கக் கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாக்கப்பட வேண்டும் என்றார்.

துவக்கக் கல்வி என்பது, மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் வகையிலும், வருங்காலத்தில் சாவல்களை எதிர்கொள்ளும் ஆற்றலை உருவாக்கும் வகையிலும் அமைய வேண்டும்.

குழந்தைகள் படிப்பதையும், கற்பதையும் விரும்பும் வகையில் பாடப் புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கலாம் கூறினார்.

நேர மேலாண்மையையும், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதையும் துவக்கக் கல்வியிலேயே கற்றுத் தர வேண்டும், தங்களுக்கென்று ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதனை நோக்கி கடுமையாக உழைக்கும் வகையில் மாணவர்களை துவக்கக் கல்வி கற்கும்போதே உருவாக்க வேண்டும் என்றார்.

பின்னர், பயங்கரவாதம், ஊழல், இந்தியா-பாகிஸ்தான் உறவு பற்றி குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கும், அப்துல் கலாம் பதில் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us