UPDATED : ஜூலை 23, 2011 12:00 AM
ADDED : ஜூலை 23, 2011 05:54 PM
அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான பாடங்கள் பொதுமக்கள் கருத்துக் கேட்க வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்று மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்தது. இதையடுத்தே, மருத்துவக் கவுன்சில், பொது நுழைவுத் தேர்வுக்கான பாடங்களை தயாரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பாடங்களை படித்துப் பார்த்து பொதுமக்கள் அவர்களின் கருத்துக்களை மூன்று வாரத்திற்குள் அளிக்குமாறும் மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 11ம் தேதி வரை, எங்கள் இணையதளத்தில் இந்த பாடங்கள் வெளியிடப்பட்டிருக்கும். பொதுமக்களின் கருத்தை தெரிந்து கொள்வதற்காகவே இது வெளியிடப்பட்டுள்ளது என்று மருத்துவக் கவுன்சில் அதிகாரி கூறினார்.
பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தங்களில் வரும் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் இருந்து நுழைவுத் தேர்வுக்கான பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
